இந்தியா

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பஞ்சாப்

ANI


சண்டிகர்: அரசு ஊழியர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து பஞ்சாப் மாநில அரசு, வெள்ளிக்கிழமை, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளது. நாட்டில், பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்கும் நான்காவது மாநிலமாக பஞ்சாப் உருவாகியுள்ளது.

பஞ்சாப் மாநில அமைச்சரவை இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக மாநில முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஒன்று அதன் ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. உங்களது அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாம் எப்போதும் நமது ஊழியர்கள் பக்கமாக இருப்போம். உறுதியளித்தோம். நிறைவேற்றுகிறோம். நாங்கள் சொல்வதை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

தாளவாடியில் இடியுடன் பலத்த மழை

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

SCROLL FOR NEXT