இந்தியா

அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! 

DIN

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன கடைசி வீரர்களின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

அருணாசலில் சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற பகுதியிலிருந்து 5 வீரர்களுடன் அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டா், நேற்று காலை 10.43 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது 4 வீரா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராணுவ வீரரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த மாதம் அருணாசலப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகியது. கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி, அந்த மாநிலத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, விமானி ஒருவா் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT