இந்தியா

18 லட்சம் விளக்குகள்! மோடி வருகை! விழாக்கோலம் பூண்டது அயோத்தி!

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்களை 22,000-க்கும் அதிகமான பக்தா்கள் ஏற்றி வழிபாடு நடத்த உள்ளனா்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி தீப ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 6வது ஆண்டாக சரயு நதிக்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். மாலை 6.30 மணியளவில் தீப நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார். 

முன்னதாக ராமா் கோயில் கட்டுமானப் பணிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்டு, ராமா் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

வணிகம் சரி...சமூக நலன்...?

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

SCROLL FOR NEXT