இந்தியா

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து!

DIN

வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.  

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 1991ஆம் ஆண்டு ஜூன் 21-ல் அமைக்கப்பட்டது. சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்த அறக்கட்டளையில், மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே அசோக் கங்குலி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக உள்ளனர். 

இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT