இந்தியா

எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

மேலும் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், எல்லையிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தார்.  

மேலும் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும், புல்பாரியில் எல்லையில் வங்க தேச வீரர்களுக்கும் இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT