இந்தியா

தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும்: வானிலை ஆய்வு மையம் 

DIN

தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக்.23) காலை கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பின்னா், படிப்படியாக நேற்று மாலை புயலாக மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வங்கதேசம் அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT