இந்தியா

காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் 47 பேர்: சசிதரூருக்கு இடமில்லை

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் விவகாரங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

அதில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோனி, ப.சிதம்பரம் உள்பட 47 பேருக்கு வழிகாட்டுதல் குழுவில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறவில்லை.

மேலும், பிரியங்கா காந்தி, ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கார்கே அமைத்துள்ள வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று காலை பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT