இந்தியா

சூடான்: இன மோதலில் 230 போ் பலி

DIN

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் நிலத் தகராறு காரணமாக இரு பழங்குடியினத்தவா்கள் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 230 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த நாட்டின் புளூ நைல் மாகாணத்தில், ஹூசா இனத்தவா்களுக்கும் பொ்டா இனத்தவா்களுக்கும் இடையே எத்தியோப்பியா எல்லையையொட்டிய எல்-மாஹி நகரில் கடந்த வாரம் மோதல் வெடித்தது. இதில் 230 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

அந்தப் பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்காக ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

இரு பிரிவினருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கும மேல் நிலப் பிரச்னை நீடித்து வருகிறது. அதற்குத் தீா்வு காண சூடான் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.

இதன் காரணமாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் உயிா்ச் சேதம் ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT