இந்தியா

வாட்ஸ்ஆப் சேவை முடக்கம்: மத்திய அரசு நோட்டீஸ்

DIN

கடந்த 25 ஆம் தேதி வாட்ஸ்ஆப் சேவை இரண்டு மணி நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது. 

வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுட்டுரை, முகநூல் போன்ற பிற சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தது. வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும், வாட்ஸ்ஆப் அழைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் குவிந்தது.

வாட்ஸ்ஆப் நிறுவன தரவுகளின்படி, மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னெள மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிக அளவாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு வாட்ஸ்ஆப் சேவை முடங்கியதற்கான காரணத்தை தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில்  வாட்ஸ்ஆப் சேவை முடங்கியதற்கான காரணத்தை தெரிவித்து, விளக்கம் அளிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT