ஜம்முவில் பயங்கரவாத சதி முறியடிப்பு: ரயில் நிலையத்தில் 18 டெட்டனேட்டர்கள் மீட்பு!
ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழன் மாலை ரயில் நிலையம் அருகே பையில் அடைக்கப்பட்டிருந்த 18 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதன் மூலம், பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை ரயில்வே போலீசார் முறியடித்தனர்.
ரயில் நிலையத்தின் அருகே வாய்க்காலில் பை கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில் நிலையம், நடைமேடைகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தினர்.
Advertisement
Advertisement
ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, தண்டவாளத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.