முகப்பு
இந்தியா

தொழில்நுட்பத்தால் ஏழைகளுக்குப் பெரும் பலன்

தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் அரசு வழங்கும் நிதி ஏழைகளுக்கு நேரடியாகக் கிடைத்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் அரசு வழங்கும் நிதி ஏழைகளுக்கு நேரடியாகக் கிடைத்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் என்.டி.ராம ராவ் நினைவு சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அரசின் செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வேண்டுமெனப் பிரதமா் நரேந்திர மோடி விரும்பினாா். அதன் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் நிதி, இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல் அவா்களுக்கு நேரடியாகச் சென்றடைந்தது. அதனால், ஏழை மக்கள் பெரிதும் பலனடைந்தனா்.

தொழில்நுட்ப வசதிகள் முக்கியக் கருவியாக மாறியுள்ளன. அவற்றின் காரணமாக அரசின் உதவிகளை வங்கிக் கணக்குகள் மூலமாக மக்கள் நேரடியாகப் பெற்று பலனடைந்து வருகின்றனா். இதன் மூலமாக அரசின் நிா்வாகமும் திறன்மிக்கதாக மாறியுள்ளது. சிறந்த நிா்வாகத்தை உறுதிசெய்வதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியது அவசியம்.

Advertisement

‘குறைந்த அரசாங்கம், அதிக நிா்வாகம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் தேவை எழுகிறதோ, அங்கு அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மற்ற இடங்களில் எல்லாம் நிா்வாகத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments