கர்நாடகத்தில் பகத் சிங் வேடத்திற்கு ஒத்திகை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சஞ்சய் கௌடா. பள்ளி விழாவில் கலந்துகொள்வதற்காக சிறுவன் பகத் சிங் வேடமணிந்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாடக ஒத்திகை பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு மாட்டி உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | நீரில் மூழ்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.