இந்தியா

நாட்டில் மேலும் 1,326 பேருக்கு கரோனா

இந்தியாவில் மேலும் 1,326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் மேலும் 1,326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,326 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,52,266 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 17,912 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 8 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,29,024 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 1,723 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,41,06,656 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். நாட்டில் இதுவரை 219.63 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று ஒரேநாளில் 83,167 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 90.09 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT