இந்தியா

காமன்வெல்த், செஸ் ஒலிம்பியாட்டில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை, அரசு வேலை: கேரள அரசு அறிவிப்பு

DIN

காமன்வெல்த் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களுக்கு கேரள அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எல்தோஸ் பாலுக்கு ரூ. 20 லட்சமும் வெள்ளிப் பதக்கம் வென்ற  அப்துல்லா அபூபக்கர், எம்.ஸ்ரீசங்கர், பி.ஆர்.ஸ்ரீஜேஷ் மற்றும் டிரெஸ்டா ஜாலி ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசும் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வேலை அவர்களுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர் நிஹால் சரினுக்கு ரூ. 10 லட்சமும் சர்வதேசப் போட்டியில் சிறிய வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்ட எஸ்.எல்.நாராயணனுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 5 லட்சமும் பரிசு வழங்கப்படுகிறது. 

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின குடிமக்களுக்கு ஓணம் பரிசாக ரூ. 1,000 வழங்கவும் லைஃப் மிஷன் வீட்டுத் திட்டத்தின் எஸ்.சி./எஸ்.டி பயனாளிகளுக்கு மானியமாக ரூ.6 லட்சம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கேரளத்தில் பனை ஏறும் தொழிலாளர் நல வாரிய ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த இரு வனக்காவலர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலை,  சின்னார் வனவிலங்கு பிரிவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஒப்பந்த வனத்துறை ஊழியரின் மனைவி சித்ரா தேவிக்கு அரசுப்பணி உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT