கேரள மாநிலம் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு மாநில அரசு வரவேற்பு அளித்தது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மரியாதைரீதியாக நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் தனிச்செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.