இந்தியா

கேரள பேரவைத் தலைவர் எம்.பி ராஜேஷ் ராஜிநாமா

DIN

கேரள மாநில சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி ராஜேஷ் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

கேரள அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.வி. கோவிந்தன் தனது அமைச்சா் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்துள்ளாா். இதைத்தொடர்ந்து அவர் அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் கோவிந்தனை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி ராஜேஷும் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை துணை பேரவைத் தலைவர் சித்தயம் கோபகுமாரிடம் வழங்கினார்.

ராஜிநாமாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், பேரவைத் தலைவராக தனது பணி ஒரு கற்றல் அனுபவம் என்று கூறினார். ராஜேஷ் அடுத்த வாரம் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், தலச்சேரி எம்எல்ஏவுமான ஷம்சீர் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT