இந்தியா

ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு மத்திய ஆயுதப் படை பாதுகாப்பு

DIN

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு இன்றுமுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய மூன்று தீவிரவாதிகள் நுழைய முயன்றதை தொடர்ந்து, மாநில ரிசர்வ் காவல் படையினர் 15 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில், அச்சுறுத்தல் காரணமாக ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் காவல் துணை ஆணையருக்கு இணையான அதிகாரி தலைமையில் 150 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நாட்டின் சில விமான நிலையங்களில் தனியார் பாதுகாப்புப் படை பணியமர்த்தல் மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டதன் காரணமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT