இந்தியா

சுங்கச் சாவடியை இடித்துச் சென்ற டிராக்டர்கள்: வைரலாகும் விடியோ

சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்பை இடித்துச் செல்லும் மணல் டிராக்டர்களின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

DIN

சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்பை இடித்துச் செல்லும் மணல் டிராக்டர்களின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், மும்பை -  ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சையான் அருகே சுங்கச் சாவடி அமைந்துள்ளது. அந்த சுங்கச் சாவடிக்கு நேற்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றப்பட்ட டிராக்டர்கள் வந்துள்ளன.

சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக தடுப்பு போடப்பட்டிருந்த நிலையில், அதை உடைத்துக் கொண்டு டிராக்டர் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த 10-க்கும் அதிகமான டிராக்டர்கள் வரிசையாகவும் வேகமாகவும் சென்றுள்ளது.

இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் செளத்ரி கூறுகையில்,

ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 51 மணல் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவேளை அதன்காரணமாக, நேற்று சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்புகளை இடித்துக் கொண்டு டிராக்டர்கள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோல்பூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

SCROLL FOR NEXT