இந்தியா

சத்தீஸ்கரில் மூன்று நக்சல்கள் சரண்!

PTI

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

ஜனதானா சர்க்கார் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஒரு பெண் உள்பட நக்சலைட்டுகள், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) முன்பு சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சரணடைந்த நக்சல்கள் மாநில அரசின் மறுவாழ்வுக் கொள்கை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பிரசாரமான 'புனா நர்கோம்' ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டனர். 

மட்கம் ஹைட்மே, பிஜாப்பூரில் உள்ள ஜன்தனா சர்க்கார் துணைத் தலைவராகவும், புனேம் கண்ணா நக்சல் மருத்துவக் குழு உறுப்பினராகவும், கரம் சுக்கு பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பெட்டகளூர் ஜன்தன சர்க்கார் துணைத் தலைவராகவும் இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டு பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள புட்கிசெரு கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் மூவரும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கையின்படி, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT