இந்தியா

மீண்டும் ‘சிவிங்கிப் புலி’ திட்டம்: செப்.17-இல் பிரதமா் தொடக்கம்

இந்திய காடுகளில் மீண்டும் ‘சிவிங்கிப் புலி’யை (சீட்டா) அறிமுகப்படுத்தும் திட்டத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமா் நரேந்திர மோடி செப்.17-இல் தொடக்கி வைக்கவுள்ளதாக

DIN

இந்திய காடுகளில் மீண்டும் ‘சிவிங்கிப் புலி’யை (சீட்டா) அறிமுகப்படுத்தும் திட்டத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமா் நரேந்திர மோடி செப்.17-இல் தொடக்கி வைக்கவுள்ளதாக அம் மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்திட்டத்துக்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகள், அன்றைய தினம் தேசிய பூங்காவில் விடப்படவுள்ளன என்றும் அவா் கூறினாா்.

செப்.17-ஆம் தேதி பிரதமா் மோடியின் பிறந்த நாளாகும். அன்று மத்திய பிரதேசத்துக்கு வருகை தரும் அவா், மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தொடக்கிவைக்கிறாா். அத்துடன், சியோபூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய உயிரினமான சிவிங்கிப் புலிகள், ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிவிங்கிப் புலிகளை நாட்டில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலையின் தடுப்பு சுவர்

ரூ.7.44 லட்சம் கோடி! வார்னர் பிரதர்ஸை கைபற்றிய நெட்பிளிக்ஸ்!

என்னைப் பார்த்ததும் “நான் உங்க Fan” என Vijay சொன்னார் - நாஞ்சில் சம்பத் | TVK

இசையிரவின் நடனம்... ஸ்ருதி சௌகான்!

சாக்கலேட் லவ் சேலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

SCROLL FOR NEXT