இந்தியா

நாகர்கோவிலில் ராகுலின் 3-ம் நாள் நடைப் பயணம் தொடங்கியது!

DIN

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூன்றாவது நாள் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் இன்று தொடங்கினார். 

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இதனை தொடங்கி வைத்தார். 

ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் நடைப் பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று நாகர்கோவிலில் தனது பயணத்தைத் தொடங்கினார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். 

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் காங்கிரஸ் குழுவினர் பயணம் செய்கின்றனர்.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT