ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி நகரில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நீதிபதி விகாஸ் குண்டல் வெள்ளிக்கிழமை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தார்.
ஊரடங்கில் எந்த இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அன்றைய நாள் அமைதியாக சென்றதால், கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டன.
இருப்பினும், பதற்றமான பகுதிகளில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, சிஆர்பிசியின் 145வது பிரிவின் கீழ் ராம்பூர் கிராமத்தில் உள்ள நிலத்தை இணைக்கும்படி, முதல் வகுப்பு, ரஜௌரி நிர்வாக நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.