இந்தியா

கட்சி தொடங்குவது குறித்து குலாம் நபி ஆசாத் வெளியிட்ட புதிய அறிவிப்பு

DIN

காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் 10 நாட்களுக்குள் புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தனது புதிய கட்சியின் கொள்கைகள் சுதந்திரமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குலாம் நபி ஆசாத் கூறியிருப்பதாவது: “ நான் என்னுடன் துணை நிற்கும் எனது சக நண்பர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். நான் எனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை அடுத்த 10 நாட்களுக்குள் அறிவிப்பேன். என்னுடைய பெயர் போலவே என்னுடைய புதிய கட்சியும் சுதந்திரமானதாக இருக்கும். அதனுடைய கொள்கைளும் சுதந்திரமானதாக இருக்கும். என்னுடன் துணை நிற்கும் பலரும் புதிய கட்சிக்கு ஆசாத் எனப் பெயரிடலாம் என ஆலோசனைக் கூறினார்கள். ஆனால், நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். அதேபோல என்னுடைய புதிய கட்சி எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காது. வேறு ஒரு கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சு வந்தால் அது என்னுடைய இறப்புக்கு பின்பு தான் நடக்கும்.

என்னுடைய கட்சி வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும். அதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதே ஆகும். நான் எந்த ஒரு கட்சிக்கும் எதிரி இல்லை. நான் ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக இருந்தபோது அதன் வளர்ச்சிக்காக உழைத்தேன். அதனையே மீண்டும் செய்ய உள்ளேன். பல்வேறு கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் உங்களது ரத்தத்தினை கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறேன் என முழங்கினார். நான் ரத்தம் சிந்த தயாராக இருக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மக்கள் உங்களது ஆதரவை மட்டும் தாருங்கள். பொய்யான வார்த்தைகளை நம்பி என்றும் ஏமாறாதீர்கள்.” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT