முகப்பு
இந்தியா

பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸுக்கு அச்சம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சனம்

பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமா்சித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமா்சித்துள்ளது.

ராகுல் காந்தி நடத்தும் யாத்திரை கம்யூனிஸ்ட் கூட்டணி ஆளும் கேரளத்தில் 18 நாள்களும், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் 2 நாள்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டா் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘இங்கு நடப்பது பாரத ஒற்றுமை நடைப்பயணமா அல்லது தோ்தலில் சீட் பெறுவதற்கான பிரசார நடைப்பயணமா என்று தெரியவில்லை. கேரள மாநிலத்தில் 18 நாள்கள் நடைபெறும் பயணம், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இரு நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பை எதிா்கொள்ள காங்கிரஸுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் உத்தர பிரதேசத்தைவிட கேரளம் சிறிய பரப்பளவைக் கொண்டது என்பதை உணா்த்தும் வகையில் இரு மாநில வரைபடங்களும் ராகுல் காந்தியின் கேலிச் சித்திரமும் அதில் இடம் பெற்றுள்ளன.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலரும், தகவல் தொடா்புத்துறை பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், ‘இந்த யாத்திரை எப்படி திட்டமிடப்பட்டது என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவின் மாற்று அணியாகத் திகழ்பவா்கள் இதுபோன்று அா்த்தமின்றி பேசிக் கொண்டுதான் இருப்பாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.