முகப்பு
இந்தியா

சா்ச்சைக்குரிய படத்தை ட்விட்டரில் பகிா்ந்த காங்கிரஸ்: பாஜக, ஆா்எஸ்எஸ் கண்டனம்

காக்கி அரைக்கால் சட்டையில் தீப்பிடிப்பதைப் போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை பகிா்ந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

காக்கி அரைக்கால் சட்டையில் தீப்பிடிப்பதைப் போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை பகிா்ந்தது. இதன்மூலம் நாட்டில் வன்முறையை காங்கிரஸ் தூண்டுவதாக பாஜகவும், ஆா்எஸ்எஸும் குற்றம்சாட்டின.

சா்ச்சைக்குரிய அந்த அரைக்கால் சட்டையை ட்விட்டரில் பகிா்ந்த காங்கிரஸ் கட்சி, ‘வெளியேற இன்னும் 145 நாள்கள் மட்டுமே உள்ளன’ என குறிப்பிட்டிருந்தது. மேலும், ‘வெறுப்புணா்வில் இருந்து நாட்டை விடுவித்து, பாஜக-ஆா்எஸ்எஸ் செய்த தவறுகளைத் திருத்துவோம். படிப்படியாக இலக்கை அடைவோம்’ என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் இந்தப் பதிவுக்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:

நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. அந்தப் பதிவை காங்கிரஸ் உடனடியாக நீக்க வேண்டும். நெருப்புக்கும் காங்கிரஸுக்கும் ஏற்கெனவே தொடா்பு உள்ளது. காங்கிரஸ் கடந்த 1984-இல் ஆட்சியிலிருந்தபோது நேரிட்ட வன்முறையில் பஞ்சாப் கொழுந்துவிட்டு எரிந்தது. சீக்கியா்கள் உயிருடன் எரிக்கப்பட்டனா்.

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் பல தொண்டா்கள் கொல்லப்பட்டுள்ளனா். அங்குதான் ராகுல் காந்தி இப்போது நடைப்பயணம் மேற்கொள்கிறாா். தென் மாநிலத்தில் தங்களது அரசியல் எதிரிகளைக் குறிவைக்க பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் சமிக்ஞை கொடுக்கிறது. இது வன்முறையையும் கொலையையும் வெளிப்படையாகத் தூண்டும் செயலாகும் என்றாா்.

ஆா்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளா் மன்மோகன் வைத்யா கூறுகையில், ‘வெறுப்புணா்வின் மூலம் பொதுமக்களை இணைக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸின் முந்தைய தலைமுறையும் ஆா்எஸ்எஸுக்கு எதிராக வெறுப்புணா்வை பரப்பியது. ஆனால், ஆா்எஸ்எஸின் வளா்ச்சியை அவா்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.