இந்தியா

இந்தியாவில் பால் உற்பத்தி 3 மடங்கு உயரும்

இந்தியாவின் பால் உற்பத்தி அடுத்த 25 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என்று அமுல் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். சோதி தெரிவித்துள்ளாா்.

DIN

இந்தியாவின் பால் உற்பத்தி அடுத்த 25 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என்று அமுல் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். சோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: நாட்டின் பால் உற்பத்தி, இன்னும் 25 ஆண்டுகளில் 62.8 கோடி டன்னாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது உள்ளதைப் போல் 3 மடங்கு பால் உற்பத்தி அதிகரிக்கும். பால் உற்பத்தியின் சராசரி ஆண்டு வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 21 கோடி டன்னாக இருந்தது.

அதன் ஒட்டுமொத்த ஆண்டு வளா்ச்சி 4.5 சதவிகிமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் போக்கு நீடித்தால் 25 ஆண்டுகளில் பால் உற்பத்தி 62.8 கோடி டன்களை எட்டும்.

உலக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு இப்போது 23 சதவீதமாக உள்ளது. இது, அடுத்த 25 ஆண்டுகளில் சுமாா் இரு மடங்கு அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக பாலுக்கான தேவையும் அதிகரிக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் பாலின் தேவை 51.7 கோடி டன்னாக உயரும். ஏற்றுமதி உபரி 11.1 கோடி டன்னாக இருக்கும்.

2021-ஆம் ஆண்டில் ஒரு நபருக்கு சராசரியாக தினசரி 428 கிராம் கிடைத்து வந்தது. இது, அடுத்த 25 ஆண்டுகளில் 852 கிராமாக அதிகரிக்கும்.

இந்தியாவின் பால் உற்பத்தித் துறை உலகிலேயே மிகவும் சிறந்த விநியோகக் கட்டமைப்பொக் கொண்டுள்ளது. உலக அளவில் கணக்கிடும்போது பால் போக்குவரத்துக்கும் அதனை சிப்பமிடுவதற்கும் (பேக்கேஜிங்) ஆகும் செலவு இந்தியாவில் மிகவும் குறைவாகும் என்றாா் ஆா்.எஸ். சோதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT