இந்தியா

எஸ்பிஐ பயனாளர்கள் ஃபாஸ்டேக் தொகையை அறிந்து கொள்ள எளிய வழி

DIN


ஃபாஸ்டேக் அட்டையில் இருக்கும் மீதித் தொகை எவ்வளவு என்பதை பயனாளர்கள் மிக எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது எஸ்பிஐ.

எஸ்எம்எஸ் வாயிலாகவே, ஃபாஸ்டேக் அட்டையில் இருக்கும் தொகையை பயனாளர்கள் இனி எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் சுங்கச்சாவடிகளுக்கான கட்டணங்களை செலுத்த ஃபாஸ்டேக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாகவே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வப்போது இந்த சேமிப்புக் கணக்குக்கு நாம் பணத்தை பரிமாற்றம் செய்து வைத்துக் கொண்டால் போதுமானது.

ஃபாஸ்டேக் அட்டைக் கணக்கில் இருக்கும் தொகயை அறிந்து கொள்ள எஸ்பிஐ வங்கி புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, எஸ்பிஐ வெளியிட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதும்.

அதாவது, புகைப்படத்தில் காட்டியிருப்பது போல,

உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்ணிலிருந்து FTBAL டைப் செய்து, 7208820019 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், உடனடியாக உங்கள் எஸ்பிஐ ஃபாஸ்டேக் அட்டையின் தொகை உங்கள் திரையில் தோன்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT