இந்தியா

நடைப்பயணத்தின் 6வது நாளில்.. கனியாபுரத்திலிருந்து புறப்பட்டார் ராகுல்

DIN


பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 6வது நாளை, கேரளமாநிலம் கனியாபுரத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கனியாபுரம் என்ற இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நடைப்பயணம் 11 மணியளவில் அட்டிங்கல் பகுதியில் நிறுத்தப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு மாலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய நடைப்பயணத்தின் போது, அவ்வழியாகச் சென்ற பள்ளிச் சிறுவர்கள், பொதுமக்கள் பலரிடம் ராகுல் காந்தி உரையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT