ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்களுடன் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT