இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி கைது , பெரிய அளவிலான தாக்குதல் தவிர்ப்பு

ஜம்மு-காஷ்மீரின் ரியாஷி மாவட்டத்தில் காவல் துறையினரால் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜம்மு-காஷ்மீரின் ரியாஷி மாவட்டத்தில் காவல் துறையினரால் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது: “ பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ரூ.1,81,000 ரொக்கம் ஆகிவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த தீவிரவாதி ஜாஃபர் இக்பால் என்பது தெரிய வந்துள்ளது. அவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது இஷாக்கின் சகோதரர் என்பதும் தெரிய வந்துள்ளது. முகமது இஷாக் ராஜௌரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்தியத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.” என்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட முகமது இஷாக்கின் சகோதரர் தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தீவிரவாதிகளில் ஒரு சிலர் மக்களுடன் மக்களாக இருந்து தீவிரவாதத் தாக்குதலை மேற்கொள்கின்றனர். ஜாஃபர் இக்பால் அந்த வகையைச் சார்ந்த தீவிரவாதியாவார்.  

இந்த கைது நடவடிக்கையின் மூலம் பெரிய அளவிலான தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் ஜம்மு-காஷ்மீரின் ரியாஷி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வருகின்றன. தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. இக்பால் போன்றவர்கள் அந்த தீவிரவாத அமைப்புகளுக்கு சாதரண மக்கள் எனும் போர்வையில் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT