இந்தியா

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த வேலைவாய்ப்பின்மை: ராகுல் காந்தி

DIN

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை வலிமையாக்க காங்கிரஸ் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இதனை தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பாத யாத்திரை இன்று 9வது நாளை அடைந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ நான் என்னுடைய நடை பயணத்தில் இளைஞர்கள் பலரை சந்தித்து வருகிறேன். அரசிடமிருந்து இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாடு இன்று 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மையை சந்தித்துள்ளது. படித்த இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களது எதிர்காலத்தினை வளமைப்படுத்துவது எங்களின் கடமை. நாங்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வோம்.” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT