இந்தியா

நேபாளத்தில் நிலச்சரிவு: 13 பேர் பலி, 10 பேர் மாயம்!

நேபாளத்தின் அச்சம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மாயமாகியுள்ளனர். 

ANI

நேபாளத்தின் அச்சம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மாயமாகியுள்ளனர். 

மேற்கு நேபாளத்தில் உள்ள அச்சம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர் என்று துணை தலைமை மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜால் கூறினார். 

பேரிடரை அடுத்து, உள்துறை அமைச்சர் பால் கிருஷ்ண காந்த் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஹெரிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் தார்ச்சுலா மாவட்டத்தில் உள்ள பங்கபகத் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காணவில்லை.

தொடர் மழையால் லஸ்கு மற்றும் மகாகாளி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

நேபாளத்தில் ஆண்டுதோறும் பருவகாலத்தில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவுகளால் பல உயிரிழப்புகளைப் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவாரியா கொள்ளையா்கள் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்

முதியவரிடம் ரூ. 4 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

இரட்டை ரயில் பாதைப் பணி: தோட்டியோடு-மடவிளாகம் நெடுஞ்சாலை நவ. 24 முதல் மூடல்

கைப்பேசி பயன்பாடு: மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் - அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுரை

SCROLL FOR NEXT