பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் ஆம் ஆத்மி? கேஜரிவால் விளக்கம் 
இந்தியா

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் ஆம் ஆத்மி? கேஜரிவால் விளக்கம்

பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி இணைவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

DIN


புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய மாநாடு புது தில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி இணைவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜரிவால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை விட்டுவிட்டு, நாட்டில் உள்ள 130 கோடி மக்களிடம் கூட்டணி அமையுங்கள் என்று வலியுறுத்தினார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி மக்களுக்கு பரீட்சயமாகி வருவதற்கு எதிராக பாஜக குரல் கொடுத்துவருகிறது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பொய்யான ஊழல் வழக்குகளைப் போட்டு, கட்சியை நசுக்கப் பார்க்கிறது பாஜக. தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆம் ஆத்மியை பலமிழக்கச் செய்ய எடுத்த பாஜகவின் முயற்சி தோற்றுவிட்டது என்று கூறினார்.

பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் இணைவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே வேளையில், 130 கோடி இந்திய மக்களும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாம்தான் நம்பர் ஒன் என்ற இடத்துக்கு வருவோம். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT