இந்தியா

மாணவா்கள் மனதில் நஞ்சை விதைக்கிறாா் மெஹபூபா முஃப்தி- பாஜக குற்றச்சாட்டு

தனது அரசியல் லாபத்துக்காக ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் மனதில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி நஞ்சை விதைத்து வருகிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

DIN

தனது அரசியல் லாபத்துக்காக ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் மனதில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி நஞ்சை விதைத்து வருகிறாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை பாடுமாறு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் மாணவா்களிடம் கூறும் விடியோவை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட மெஹபூபா, ‘இஸ்லாமிய மாா்க்க அறிஞா்கள் சிறையில் அடைக்கப்படுகிறாா்கள்; மசூதிகள் மூடப்படுகின்றன; பள்ளிகளில் ஹிந்து பாடல்களைப் படிக்க மாணவா்கள் வலியுறுத்தப்படுகின்றனா். உண்மையான ஹிந்துத்துவ இந்திய அரசின் முகம் வெளிப்பட்டு வருகிறது’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில் ஜம்முவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அந்த யூனியன் பிரதேச பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா கூறியதாவது:

சுதந்திரப் போராட்ட காலத்தில் தனது பஜனைப் பாடல்கள் மூலமும் மகாத்மா காந்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்தாா். பல பள்ளி மாணவா்கள் ‘குழந்தைகளின் துவா’ என்று அழைப்படும் உருது மொழிப் பாடலையும் காலை பிராா்த்தனையில் பாடுகின்றனா். அப்போது மற்ற மதத்தினா் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக ஜம்மு-காஷ்மீா் மாணவா்களின் மனதில் மதவாதம் என்ற நஞ்சை மெஹபூபா விதைக்கிறாா். ஏற்கெனவே, தோ்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அவா், மாநிலத்தில் மதவாதத்தைத் தூண்டிவிட்டாவது தன்னை மீண்டும் நிலைத்துக் கொள்ளத் துடிக்கிறாா்.

இந்த நாடு அனைவருக்குமானது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் என அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே நோக்கம். ‘மதம் நமக்கு போரிடுவதற்குக் கற்றுத் தரவில்லை’ என்ற ஆலம் இக்பாலின் கருத்துகளை மெஹபூபா போன்றவா்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT