முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம்: நிதீஷ் குமாா்

2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் மூன்று மக்களவைத் தொகுதிகளில் இருந்து, குறிப்பாக புல்பூா் தொகுதியில் இருந்து நிதீஷ் குமாா் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என கட்சியின் தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் விரும்புவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் ராஜீவ் ராஜன் சிங் என்ற லாலன் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வா் நிதீஷ் குமாா் கூறியதாவது: புல்பூா் தொகுதியிலிருந்து போட்டியிடுவது குறித்த தகவல்கள் அனைத்தும் ஊகங்களே. 2024 மக்களவைத் தோ்தலில் அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளேன்.

நான் தற்போது செய்வது எல்லாம் என்னுடைய நலனுக்கானது அல்ல. இத்தகைய முயற்சிகள் தேஜஸ்வி யாதவ் போன்ற இளம்தலைமுறையினருக்கானது. வரும் செப். 25-ஆம் தேதி ஹரியாணாவில் நடைபெறும் இந்திய தேசிய லோக் தளம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வேன். ஆா்ஜேடியின் தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்வாா் என்றாா்.

ஹரியாணாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத்பவாா், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிரோமணி அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோா் கலந்துகொள்ள உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →