இந்தியா

உ.பி.யில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

DIN

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்த வெவ்வேறு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்ததாக மூத்த அதிகாரி தெரிவித்தார். 

முதல் சம்பவத்தில் சிவில் லைன் பகுதியில் உள்ள சந்திரபுரா கிராமத்தில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். 

உயிரிழந்தவர்கள் சிங்கு 10, அபி 8, சோனு 7, ஆர்த்தி 5 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ரிஷாவ் 4 மற்றும் அவரது பாட்டி சாந்தினி தேபி 75 ஆகியோர் பலத்த காயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவது சம்பவத்தில், எக்டில் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிருபால்பூர் கிராமத்தில், குடிசையிலிருந்த பெட்ரோல் பங்கின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் ராம் சனேஹி (65) மற்றும் அவரது மனைவி ரேஷ்மா தேபி (62) ஆகியோர் உயிரிழந்தனர். 

மூன்றாவதாக, சகர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டவா கே பங்களான் கிராமத்தில் நடந்தது. அங்கு கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஜபர் சிங் (35) உயிருடன் புதைக்கப்பட்டார் என்று அதிகாரிகள் கூறினர். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT