இந்தியா

ஒடிசாவில் பேரிடர் மேலாண்மை திறனை அதிகரிக்க ரூ.400 கோடி முதலீடு!

ஒடிசா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை திறனை நவீனமாக்குதல் மற்றும் முன்னணி பிரிவுகளின் தீவிர பயிற்சியுடன் மேம்படுத்த ரூ.400 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை திறனை நவீனமாக்குதல் மற்றும் முன்னணி பிரிவுகளின் தீவிர பயிற்சியுடன் மேம்படுத்த ரூ.400 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைமைச் செயலாளர் எஸ்.சி.மோகபத்ரா தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த முதலீடு ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை(ஒடிஆர்ஏஎப்) மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் போன்ற முன்னணி நிறுவனங்களை மேம்படுத்தும் என்று மேம்பாட்டு ஆணையர் மற்றும் சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.ஜெனா கூறினார். 

நவீன நிவாரணம் மற்றும் மீட்பு உபகரணங்களுக்கு இந்த தொகை செலவிடப்படும் என்றார். மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வடிகால் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும், மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில்  வெள்ள முகாம்களை அமைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மகாநதி மற்றும் சுபர்ணரேகா நதியில் ஏற்பட்ட இரட்டை வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு, மேலும் வெள்ள முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாரி, பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்நகர் மற்றும் பூரி மாவட்டத்தில் உள்ள கோப் போன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளக் கரைகள் பலப்படுத்தப்படும். பேரிடருக்குப் பிந்தைய தேவைகளை மதிப்பிடுவதற்கான திட்டமும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேவைகளின் சரியான மதிப்பீட்டிற்குப் பிறகு, நீண்ட கால மீட்பு, புனரமைப்பு மற்றும் எதிர்கால சேதம் ஆகியவற்றிற்கு கூடுதல் ஆதரவு திரட்டப்படும் என்று ஜெனா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT