இந்தியா

கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று

DIN



புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,52,982 ஆக உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 45,281 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,424 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,84,695 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.71 ஆக அதிகரித்துள்ளது.  அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 45,281 ஆக உள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 20 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,449 ஆக உயர்ந்துள்ளது, இதில் கேரளத்தில் மட்டும் 8 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.19 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,17,26,27,951 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 14,91,017 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த பிறகு வாக்காளா்கள் பத்திரமாக வீடு திரும்ப இலவச இரு சக்கர வாகன சேவை: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

SCROLL FOR NEXT