இந்தியா

ராஜஸ்தான் வழியாக அம்பாஜி கோயிலுக்குச் செல்லும் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி செப்.30ல் ராஜஸ்தானின் அபு சாலை வழியாக, குஜராத்தில் உள்ள அம்பா மாதா கோயிலுக்குச் செல்லவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. 

DIN

பிரதமர் நரேந்திர மோடி செப்.30ல் ராஜஸ்தானின் அபு சாலை வழியாக, குஜராத்தில் உள்ள அம்பா மாதா கோயிலுக்குச் செல்லவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. 

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் 29ல் குஜராத்தில் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர், குஜராத்தில் உள்ள அம்பாஜி கோயிலுக்குச் சென்று, கப்பர் தீர்த்தத்தில் நடக்கும் மகா ஆரத்தியிலும் கலந்துகொள்கிறார். 

இதற்காகச் சிறப்பு விமானத்தில் அபு சாலையில் அமைந்துள்ள விமானப் பகுதியில் பிரதமர் மோடி தரையிறங்குகிறார். பின்னர் 21 கீ.மீ பயணம் செய்யவுள்ளார், அதில் 16 கீ.மீ சாலை ராஜஸ்தானில் வருவதாகும். 

எனவே, பிரதமர் மோயின் வருகைக்கு காத்திருக்கு ராஜஸ்தான் பாஜக அணியினர் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். 

பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா தில்லியிலிருந்து, நேராக உதய்பூருக்குச் சென்று, சனிக்கிழமை அபு சாலை வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்கும் ஏற்பாடுகளை மேற்பார்வையிட உதய்பூரில் இருந்து சாலை வழியாக அபு சாலைக்குப் புறப்பட்டார்.   Rajastan route 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT