ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவ்ஹோடு கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
படிக்க: ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி
Advertisement
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தேடுதல் நடத்தியதில், இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காமில் உள்ள தாகியாவைச் சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் முகமது ஆசிப் வானி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.