இந்தியா

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கிவைத்து பயணம் செய்த பிரதமர் மோடி

காந்திநகர்- மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு இன்று ரயிலில் பயணம் 

DIN

காந்திநகர்- மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

காந்திநகர் ரயில் நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, ​​அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் இருந்தனர். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை பார்வையிட்டார். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் மோடி ஆய்வு செய்தார். பின்னர் காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். 

அப்போது ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தன்னுடன் பயணித்த சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் அவர் உரையாடினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT