முகப்பு
இந்தியா

5 மாநில தேர்தல்: பிரசாரங்களுக்கான தடை ஜன. 31 வரை நீட்டிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரசாரங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கானத் தடை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரசாரங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கானத் தடை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி வெளியிட்டது. 
முன்னெப்போதும் இல்லாத வகையில், பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள், நேரடிப் பிரசாரங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜனவரி 22-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

எனினும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
மேலும் வீடு விடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதியிருந்த நிலையில் இனி 10 பேர் வரை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →