முகப்பு
இந்தியா

ஹைதராபாத் கூட்டு பலாத்கார சம்பவம்: அரசியல்வாதிகளின் மகன்களுக்குத் தொடர்பு?

ஹைதராபாத்தின் மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில், ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
ஹைதராபாத் கூட்டு பலாத்கார சம்பவம்: அரசியல்வாதிகளின் மகன்களுக்குத் தொடர்பு?
பகிர்:


ஹைதராபாத்: ஹைதராபாத்தின் மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில், ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசியல் பிரமுகர்களின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மகன்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாகவும், ஒரு எம்எல்ஏவின் மகனுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

ஆனால், இந்த பலாத்கார சம்பவத்தில், எம்எல்ஏவின் மகன் ஈடுபடவில்லை என்றும், அதற்கு முன்பே காரிலிருந்து இறங்கிவிட்டதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட, சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பழகியுள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர். அப்போது, காரிலேயே சிறுவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →