முகப்பு
இந்தியா

கார்கிவிலிருந்து நடந்தாவது வெளியேறுங்கள்: இந்தியத் தூதரகம்

உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்கள் நடந்தவாது அங்கிருந்து வெளியேறுங்கள் என  இந்தியத் தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்கள் நடந்தவாது அங்கிருந்து வெளியேறுங்கள் என  இந்தியத் தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகிறது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கி வருகின்றனர்.

கார்கிவ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் அங்குள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதில், கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்குள்(இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) நடந்தாவது வெளியேறி பெசோசின், பாஃபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ரஷியப் படைகள் கார்கிவ் நகரை முழுமையாக இன்று கைப்பற்ற வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →