பஞ்சாபைத் தொடர்ந்து உ.பி.யை குறிவைக்கும் ஆம் ஆத்மி
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தயாராக தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தயாராக தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து ஆம் ஆத்மி கட்சி களப்பணிகளை செய்து வருகிறது.
படிக்க | 35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடிவு: பஞ்சாப் முதல்வர்
Advertisement
Advertisement
அதன் ஒரு பகுதியாக கடந்த இரு நாள்களாக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியில் ஆலோசனைகள் நடைபெற்றன.
இதில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான களப்பணிகளைத் தொடங்க தயாராக உத்தரவிட்டார். மேலும், மற்ற தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவாகும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.