நாட்டில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,260 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் கோதுமை கையிருப்பு மேலும் வீழ்ச்சியடையலாம்
Advertisement
Advertisement
நேற்று ஒரேநாளில் 2,467 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 16,400 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 191.48 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,76,005 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.