முகப்பு
இந்தியா

முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர்

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

Updated On : 3 அக்டோபர் 2022, 8:50 am IST
பகிர்:

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 
தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவா்களின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாகவும் அகிலேஷிடம் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments