தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி
தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
பைக் விற்பனையகத்துக்குள் திடிரென பற்றிய தீ மற்றும் கரும்புகையில் அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதையும் படிக்க | வில்லங்க சான்று பாா்வையிட புதிய நடைமுறை: வணிகவரி-பதிவுத் துறை செயலாளா் அறிவிப்பு
Advertisement
Advertisement
பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த அந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டபோது, அங்கிருந்த தங்கும் விடுதியில் 25 முதல் 30 பேர் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். 7 பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்து நேரிட்டபோது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்திலிருந்து சிலர் குதித்த விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.