குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
குடியரசுத் தலைவர திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து கூறியது பற்றி...
குடியரசுத் தலைவர திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரின் தைரியம், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் அவரின் அசைக்க அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
தனது பொது வாழ்க்கையில், பல ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் சிறந்த சேவையாற்றி வருகிறார். குறிப்பாக, பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்க்கைக்காக சேவையாற்றி வருகிறார். அவரது உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாய் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். மேலும், ஒடிஸாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
PM Modi extends birthday wishes to President Droupadi Murmu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.