கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானாவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா

தெலங்கானாவில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தெலங்கானாவில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பிரபாஸ் யோஜனா என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் தெலங்கானாவுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருகையின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்ஆர்ஆர் திரைப்படக் குழுவினரை பார்ப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படக்  குழுவினருடனான சந்திப்பு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தெலங்கானாவிலும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தெலங்கானாவில் பாரதீய ராஷ்டிரிய சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையேயான அரசியல் போட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்குமான வார்த்தப் போர் தெலங்கானா அரசியலில் தினசரி நிகழ்வாக மாறிவிட்டது. பாரதீய ராஷ்டிரிய சமிதிக்கு மாற்றுக் கட்சியாக பாஜக மாற முயற்சி செய்து வருகிறது. தெலங்கானாவின் சில இடைத்தேர்தலிலும் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT